அங்கஜன் இராமநாதன் அவர்களின் குற்றச்சாட்டு!!!

0
407

 

கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(06) யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் நமது மக்களின் குறைகளைத் தீர்க்காமல் சிலர் தொடர்ச்சியாக மனித உரிமைகள் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கஜன் இராமநாதன் அவர்கள் அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது,

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் ஆன போதிலும் தொடர்ச்சியாக தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகின்றார்கள்.தேர்தல் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பேன் என ஜனாதிபதி கூறியதை நிறைவேற்றும் வகையில் பிரதமரின் பணிப்புரைக்கமைய வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் தடுத்திருந்த நிலையில் தாளையடி திட்டத்தை கூட அவர்களால் செய்ய முடியவில்லை.இப்பொழுது காணப்படும் அரசாங்கம் முந்தைய அரசாங்கம் போல் இல்லாமல் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் மக்களுக்கான அபிவிருத்தி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும.எனவே சிலர் அரசியலில் பகல் கனவு காணக்கூடும் அதைப்பற்றி எமக்கு பிரச்சினை அல்ல மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் தருணம் அதுவே ‘என் கனவு யாழ்’“