நாட்டில் கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி முடித்தவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியுள்ளது.
இதுவரை 12,043,368 பேர் தடுப்பூசிகளின் இரண்டு நிலைகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் 100 வீத மக்கள் தொகையில் 56 வீத மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
அத்துடன் 1 கோடி 46 லட்சத்து 39,679 பேர் கொவிட் தடுப்பூசியின் முதல் கட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளர்கள் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டம் நாடாளவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம்(06) 99,504 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





