வெளிநாட்டில் தொழில் புரிவதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்காக அறிவித்தல்!

0
339

சைனோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டு கட்டங்களையும் பெற்றுக் கொண்ட இலங்கை தொழிலாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகை தருமாறு கட்டார் மற்றும் சவுதி அரேபிய நாடுகள் அறிவித்தல் விடுத்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் போது பைஸர் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பபு பணியகத்தின் பொது மேலாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை அண்மித்துள்ளதாகவும் அவர்களில் 8,000 பேருக்கு முதல் கட்டமாக பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.