பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் குறித்த பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பெற்றோருக்கு அறிவித்தல் விடுக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முகக் கவசம் அணியும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு மீள திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மாணவர்கள் முகக் கவசம் அணிவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதை குறிப்பிட்ட விசேட வைத்தியர் சுசி பெரரா முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பெற்றொர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





