7 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க கையிருப்புடன் விமான நிலைய ஊழியர் கைது!

0
266

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 7 கோடிக்கும் அதிக பெறுமதி உடைய தங்க கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியர் தங்க இருப்பை தமது உடலில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் வளாகத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க ஊடக பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 4 கிலோ கிராமுக்கும் அதிக எடையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க கையிருப்புக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.