குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில் நேற்றைய தினம்(18) இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய கரகஹகெதர பிரதேசத்தில் உள்ள மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருமண விழாவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்டதை தொடர்ந்து இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் மது அருந்தியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் அவதானம் முற்றாக குறைந்துவிட்டது என எண்ணி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீண்டுமொரு நெருக்கடி நிலைமை உருவாகக்கூடும் எனவும் முதலாவது அலையில் எவ்வாறு எச்சரிக்கையுடன் செயற்பட்டமோ அவ்வாறே தற்பொழுதும் செயற்பட்டால் விரைவாக அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப அவர்கள் தெரிவித்துள்ளார்.





