பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி நகருக்கு இன்று சென்றடைந்துள்ளார்.
திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வீதி வழியாக திருப்தி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்ல உள்ளதுடன் இரவு மலையில் தங்கியிருக்க உள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு நாள் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றிருந்தார்.





