வைத்தியசாலை நோயாளர்களிடம் மன்னிப்பு கோரியது

0
252

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மருத்துவமனை ஒன்று கோவிட் வைரஸ் தொற்றியவர்களுக்கு வைரஸ் தொற்றவில்லை என்று மருத்துவ அறிக்கைகளை வழங்கியுள்ளது.

400 பேரிடம் மாதிரிகளை பெற்று நடத்திய பரிசோதனையின் பின்னர் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தவறுதலாக நடந்து விட்டதாக சிட்னி மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நடந்த தவறுக்கு மருத்துவமனை கோவிட் தொற்றாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் மருத்துவமனை அறிவித்துள்ளது.