கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் தேநுவர மெனிக்கே ரயில் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சேவையில் ஈடுப்படுத்தப்படுவதற்கு இருந்து இலக்கம் 1001 உடைய தேநுவர மெனிக்கே ரயில் இன்று முதல் இடைநிறுத்தப்படுகின்றது.
அத்துடன், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 1001 உடைய தேநுவர மெனிக்கே ரயில் நாளை (29) முதல் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





