இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பரிவர்தனை கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா கடனை மீள் செலுத்துமாறு இலங்கை நிதி அமைச்சிடம் கோரியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இலங்கை மத்திய வங்கி தனது ட்விட்டர் கணக்கில் அதிகாரபூர்வமாக அத்தையக கோரிக்கை எதனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் குறித்த பணம் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.மேலும் முன்னோக்கிய ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கியானது 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.





