இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நியமித்துள்ளார்.
குறித்த குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.செயலாளராக ருவன் கரகல நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்ககார,ரொஷான் மஹனாம மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பிரதான சேவையாக விளையாட்டுத்துறை அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை வழங்குவதே முக்கிய சேவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதுடன் இலங்கை கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய முறையில் சேவையாற்றி இலங்கையின் உயர்மட்ட கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் பயிற்சிக்கு வழிகாட்டுதல் குறித்த குழுவின் நோக்கமாகும் என விளையாட்டு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.





