வவுனியாவில் இன்று காலை வேளையில் குளத்தில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப்பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர்,வைரவபுளியங்குளம் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஆசிரியர் வவுனியா தமிழ்மகா வித்தியாலயத்தின் இராசயனவியல் கற்பிக்கும் ஆசிரியர் எஸ்.பரந்தன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,குறித்த ஆசிரியர் தாமரைப்பூ பறித்துக் கொண்டிருந்த வேளையில் தாமரைக் கொடியில் சிக்கி நீரிழ் மூழ்கியுள்ளார்.அத்துடன் குளத்தின் இவரின் நடமாட்டத்தை காணாததை அவதானித்த அயலவர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடுதல்களை மேற்கொண்ட பொழுது ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்தள்ளனர்.







