மத்திய எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 32 பேர் உயிரழந்துள்ளனர் எனவும் 165 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விபத்தின் அதிர்ச்சி காரணமாக பலர் சுயநினைவின்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது சொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எகிப்தின் ரயில்வே அமைப்பு பொதவாக மோசமாகவே நிர்வகிக்கப்பட்டு வருவதாக குற்றுச்சாட்டக்கள் காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.





