அமெரிக்காவின் நிதியமைச்சராக ஜனட் யெல்லன் நியமனம்

0
419

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதுடைய ஜனட் யெல்லன் பதவியேற்றுள்ளார்.

இதன்படி அமெரிக்காவின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ள முதல் பெண்மணி என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

அதன்படி முன்னதாக இவரை தேர்வு செய்வதற்கு செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 84 உறுப்பினர்கள் ஜனத் யெல்லனுக்கு வாக்களித்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்துள்ள நிலையில் நிதி அமைச்சராக ஜனட் யெல்லன் பதவியேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.