நாட்டின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 30, 31 ஆம் திகதிகள் மற்றும் பெப்ரவரி மாதம் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்படி ஒத்திகை இடம்பெறும் நாட்களில் காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதிகளிலும் மற்றும் பெப்ரவரி 4 ஆம் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொரளை முதல் தாமரை தடாகம் சுற்று வட்டம் வீதி மூடப்படவுள்ளது.இதன் காரணமாக பொரளையில் இருந்து பிரவேசிக்கும் வாகனங்கள் ஹோட்டன் பிரதேசம் ஊடாக விஜேராம மாவத்தை மூலம் வோட் பிரதேசத்தை நோக்கி பயணித்து நகர மண்டபம் யூனியன் பிரதேசம் ஊடாக பயணிக்க முடியம்.
அத்துடன் காலி வீதி,பௌத்தாலோக மாவத்தை போக்குவரத்துகள் வழமைப்போல நடைபெறும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





