கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து கரம் பிடித்தார். Photo

0
172

பிரபல நடிகரின் மகனும், நடிகருமான கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து கரம் பிடித்தார்.

தேவராட்டம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது நட்பாக பழக முடிவில் அது காதலானது.

தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்த மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது.