ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்!

0
156

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களை படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூறி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 102 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் படுகொலை செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.