சுழிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு சுகாஸ் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையானது, திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். சவுக்கடி பிள்ளையார் கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கா விட்டால் இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.





