இந்தியாவின் நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ சேவை இன்று ஆரம்பம்

0
85

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார்.

கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

நீருக்கடியிலான மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தாவின் இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் சால்ட் லேக்கை இணைக்கும்.

மேலும் ஆறு ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் மூன்று நிலத்தடி ரயில் நிலையங்கள் ஆகும்.

இன்றைய தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதில் பல உயரதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்வார்கள் என்றும் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் பயண அனுபவத்தினை பயணிகள் இன்று முதல் அனுபவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிது.