வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி

0
196

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி வாகனப் பேரணியும், மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்றும் இன்று சனிக்கிழமை நடைப்பெற்று வருகிறது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும்

இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அச்சநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின்பேரில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த வாகன பேரணி வவுனியா நகரை வந்தடைந்தது.