ஈரானின் இஸ்ஃபாஹாவில் அமைந்துள்ள இரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலையொன்றில் வெடிப்புச் சம்பவம்

0
346

ஈரானின் இஸ்ஃபாஹாவில் அமைந்துள்ள இரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஈரானிய அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.