நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது

0
428

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60,233 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 311 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,520 பேர் குணமடைந்து வீடுகளுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,566 ஆக காணப்படுவதோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,379 ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.