இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

0
414

எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் சங்கங்கள் 08 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதனால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்கவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, தனியார் பஸ் துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்க மறு அறிவித்தல் வரும் வரை குறித்த அறிவிப்பு அமுலில் இருக்குமென தெரிவித்துள்ளார்.அத்துடன் எதிர்வரும் 08 ஆம் திகதி தொடக்கம் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு நகரில் ‘சிட்டிபஸ்’ சேவையை மேலும் விரிவுப்படுத்தவும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.