இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,408 ஆக காணப்படுகின்றது.
அத்துடன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,853 ஆக காணப்படுகின்றது.அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,96,308 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 24 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,823 ஆக அதிகரித்துள்ளது.
தற்பொழுது கொரோனா தொற்றினால் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,51,460 ஆக காணப்படுகின்றது.அத்துடன் 49 லட்சத்து 59 ஆயிரத்து 445 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





