தேர்ந்தெடுக்கப்பட்ட சில வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது

0
296

மாகாண சபைகளின் கீழ் இயங்கும் மாவட்ட பொது வைத்தியசாலைகள் சிலவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் நோக்கமானது,தேசிய வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் ஆய்வக வசதிகள் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் அமைப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாத்தளை,நாவலப்பிட்டிய,எம்பிலிபிட்டிய,அவிசாவளை,கம்பஹா,மன்னார்,வவுனியா கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

மேலும் அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று(14) அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார் எனவும் அதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்கவெல்ல குறிப்பிட்டுள்ளார்.